சற்குரவின் பார்வையில்                             

Image may contain: 1 person, beard

கோயில் ஒரு சக்தி வாய்ந்த இடம். வாழ்க்கையில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும். கோயிலுக்கு சென்று எமது சக்திநிலையை உயர்த்தினால் பிரச்சினைகளை இலகுவாக சமாளிக்கலாம். எனவே ஒரு கிழமையில் ஒரு நாளாவது கோயிலுக்கு போகவேண்டும்.

கோயில்கள் மந்திர பிரதிஸ்டை செய்து சக்தியூட்டப்பட்டுள்ளது. மந்திரங்கள் என்பது மிக தூய சொற்கள் அவைகளை உச்சரீப்பதால் ஒரு கல்லை சக்தியூட்டி கடவுளாக்கலாம். நாம் கோயிலுக்கு சென்றால் இந்த சக்தி எம்மை வந்து அடைந்து எம்மை நோயற்றவராக பிரச்சினைகள் இல்லாது சந்தோஷமாக வாழ வழிவகுக்கும். தினமும் கேயிலுக்கு சென்றால் நல்லது. ஆனால் எமது இயந்திர வாழ்க்கையில் ஒரு கிழமைக்கு ஒரு தடவையாவது கோயிலுக்கு செல்ல வேண்டும். ஒரு பரிசோதனையாக ஒவ்வொரு கிழமையும் கோயிலுக்கு சென்று பார்த்துஇ உங்கள் உடல்நிலைஇ மனநிலை எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். கட்டாயமாக ஆரோக்கியமாகத்தான் இருக்கும்.

உணவு: 

எமது சயமத்தில் மாமிசத்தை தவிர்க்கக்கூறியது எமது உடல் நடலத்துக்காகவே ஆனால் எமது மனம் உடல் மாமிசத்துக்கு பழக்கப்பட்டுவிட்டது. ஒரு கிழமையில் ஒரு நாளாவது மாமிசத்தை தவிர்ப்பது எமது ஆரோக்கியத்துக்கு நல்லது. கோயிலுக்கு போகின்ற நாள் மட்டும் மாமிசத்தை தவிர்த்தால் போதும்.